இந்திய தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிப்பு..!

இந்தியா

இந்திய தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிப்பு..!

இந்திய தொழிலதிபர்கள் ஷிவ் நாடார், மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிப்பு..!

>


கடந்த 2007ல் இருந்து, அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் சிறந்த தொழிலதிபர்களுக்கு ‘குளோபல் லீடர்ஷிப் விருது’ வழங்கி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப் பட்டது.

இந்தியாவின் ஹெச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், 76, ‘டாபே’ நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மல்லிகா ஸ்ரீனிவாசன், 61, ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் இருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் தேசாய் பிஸ்வால் கூறியதாவது: விருது பெறும் ஷிவ் நாடார், ஹெச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவனத்தை துவங்கி, நவீன தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி, உலகளாவிய தொழிலதிபராக திகழ்கிறார்.

டாபே நிறுவன தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன், விவசாயத் துறையில் உற்பத்தி சார்ந்து மிகப் பெரும் உயரத்தை எட்டியுள்ளார். விவசாயத் துறையில் உற்பத்தியை அதிகரிக்க புதுமைகளை புகுத்தி சாதனை படைத்துள்ளார். இருவருக்கும் விருது வழங்குவதில் கவுன்சில் மிகுந்த பெருமை அடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலதிபர் ஷிவ் நாடார் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் சிவசைலத்தின் மகளான மல்லிகா ஸ்ரீனிவாசனின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. ‘டாடா’ குழும தலைவர் என்.சந்திரசேகரன், ‘லாக்ஹீட் மார்ட்டின்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டெய்க்லெட், ‘கூகுள்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் கடந்த ஆண்டுகளில் இந்த விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...