தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை.!

தமிழகம்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை.!

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை.!

நாடு முழுதும் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அவற்றில் இரண்டை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று டில்லி வந்திருந்தார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து பேசினார். அப்போது அவர் விடுத்த கோரிக்கை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டிற்கு நிதி தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, யானைகள் வழித்தட மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல, டில்லி வந்திருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.அப்போது, தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் தடம் எனப்படும், ‘டிபன்ஸ் இண்டஸ்ட்ரியல் காரிடாரை’ அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயலையும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது உடன் இருந்த தி.மு.க., மூத்த எம்.பி., – டி.ஆர்.பாலு கூறியதாவது:நாடு முழுதும் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் இரண்டை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும்; மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்ட போது, அதற்கென உள்ள குழுவிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார்.

தமிழகத்திற்கு என வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
.

Leave your comments here...