எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது ” – ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை

உலகம்

எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது ” – ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை

எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது ” – ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை உலகம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாகவும் அவர்களது குடும்பங்களுக்கு தமது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைக்கோடி மக்களைச் சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. ஏழைகளுக்கு வீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதி போன்றவற்றை இந்திய அரசு அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண வியாபார குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.

இந்தியாவின் பன்முக தன்மைதான் வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதாகவும் கூறினார். இந்தியா சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும்போது, அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகத்திற்கான தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகின்றன. இது அவர்களையே திருப்பி தாக்கும் என்பதை அந்நாடுகள் உணர வேண்டும்.பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை பரப்ப ஆப்கானிஸ்தானின் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம். அங்கு நிலவும் சூழலை தங்களுக்கு சாதக மாக எந்த நாடும் பயன்படுத்தக் கூடாது.

ஆப்கனில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது நம் கடமை. ஐ.நா., சபையின் செயல்பாடுகள் குறித்து சமீப காலமாக கேள்விகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஐ.நா.,வின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அதுபோல் காலத்துக்கு ஏற்றபடி ஐ.நா., சபை தன்னை சீர்திருத்தம் செய்து செயல்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

.

Leave your comments here...