மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியா

மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

மத்திய பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ராஜஸ்தானில் இருந்து மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் கன்டோன்மென்டுக்கு திரும்பிய 30 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

மத்தியபிரதேச உள்ளாட்சித்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நேற்று இத்தகவலை தெரிவித்தார். மத்தியபிரதேசத்தில் 24 மணி நேரத்தில் 36 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 10 பேர் இத்தொற்றில் இருந்து குணமடைந்திருக்கின்றனர்.

நேற்று முன்தினம் மொத்தம் 66 ஆயிரத்து 500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. கொரோனாவில் இருந்து மீட்சி விகிதம் 98.70 சதவீதமாக இருப்பதாக மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறினார்.

Leave your comments here...