வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.!

வாடிப்பட்டி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.!

மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 21 விவசாயிகளின் 78903 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 21 விவசாயிகளின் 78903 தேங்காய்கள் 35 குவியலாக மதுரை விற்பனைக்குழுவின் கண்காணிப்பாளர் திருமுருகன், தலைமையில் ஏலம் விடப்பட்டது. நடந்த ஏலத்தில், 14 வியாபாரிகள் பங்கு பெற்றனர். நடைபெற்ற ஏலத்தில், அதிகபட்சமாக, விலையாக ரூ 14.05 க்கும் குறைந்த பட்சமாக ரூ 6.46 க்கும் சராசரியாக ரூ.9.58 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூபாய் 7.39 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது; மேலும், 7 விவசாயின் 434 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில், 4 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 96.21 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 38020-க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...