மீண்டும் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு தகவல்

இந்தியாஉலகம்

மீண்டும் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு தகவல்

மீண்டும் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் – மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன.

இதில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும்.

இந்நிலையில், உள்நாட்டு தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா அனுப்பியது.

இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா 2ஆவது அலை தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்ததால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தியது.

கொரோனா பரவல் அதிகரிப்பதால் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாக தேவைப்படும் என்பதால் தடுப்பு மருந்து ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்தில் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதம் இருக்கும் தடுப்பூசி மருந்தை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை திட்டமிட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Leave your comments here...