இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்..!

இந்தியாஉலகம்

இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்..!

இந்தியா-நேபாளம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்..!

இந்தியா-நேபாளம் இடையே நடைபெறும் 15வது சூர்ய கிரன் கூட்டுபயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகரில் இன்று தொடங்கி, அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியின் போது, இந்திய ராணுவம் மற்றும் நேபாள ராணுவத்தை சேர்ந்த காலாட் படை பிரிவுகள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவர். இதன் மூலம் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான செயல்பாடுகள் மேம்படும் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் அனுபவங்கள் பகிரப்படும்.

இந்த பயிற்சியின் தொடக்க விழா, இருநாட்டு ராணுவ இசைகளுடன் பாரம்பரிய முறையில் நடத்தப்பட்டது. கூட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாற்றிய உத்தர் பாரத் பகுதி கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எஸ்.மகல், கூட்டுபயிற்சியில் ஈடுபடும் ராணுவத்தினர் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் பயிற்சி பெற வேண்டும் எனவும், இரு தரப்பின் செயல்பாடுகள் மற்றும் சிறந்த முறைகளை பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

முன்பாக, இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்க வந்த நேபாள ராணுவத்தினருக்கு பிதோராகரில், பாரம்பரிய முறையில் ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் இரு நாட்டு ராணுவங்களைச் சேர்ந்த 650 பேர் பங்கேற்கின்றனர்.

Leave your comments here...