கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்! 2 பேர் பலி

இந்தியா

கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்! 2 பேர் பலி

கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்! 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு பைக் ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்த பைக்கில் ஆண் மற்றும் பெண் என இருவர் பயணித்தனர்.


அப்போது அந்த மேம்பால சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது பின்னால் இருந்து வேகமாக மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. பைக்கில் பயணம் செய்த இருவரும் மேம்பாலத்தில் இருந்து 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இந்த கோர விபத்தில் மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த நபரை படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்குள்ளான பைக் தமிழ்நாடு பதிவெண்ணை கொண்டது என்பதால் உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...