பத்ம விருதுகள் – 2022-க்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்..!

இந்தியா

பத்ம விருதுகள் – 2022-க்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்..!

பத்ம விருதுகள் – 2022-க்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள்..!

2022 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ) ஆன்லைன் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2021 செப்டம்பர் 15 ஆகும். https://padmaawards.gov.in எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்கிறவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் காணுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இந்த நியமனங்கள் / பரிந்துரைகள் மேற்கூறிய பத்ம விருது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி, விவரிப்பு வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 வார்த்தைகள்) உட்பட தொடர்புடைய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நபர் அந்தந்தத் துறைகளில் செய்த தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவையை தெளிவாக அவை வெளிப்படுத்த வேண்டும்.

இது குறித்த மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mha.gov.in-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் காணலாம். விருதுகள் குறித்த விதிமுறைகளை https://padmaawards.gov.in/AboutAwards.aspx எனும் இணைய முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு 011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

Leave your comments here...