கொரோனா தடுப்பூசி நிலவரத்தை அறிய புதிய செயலி..!

இந்தியா

கொரோனா தடுப்பூசி நிலவரத்தை அறிய புதிய செயலி..!

கொரோனா தடுப்பூசி நிலவரத்தை அறிய புதிய செயலி..!

வாடிக்கையாளரின் தடுப்பூசி நிலவரத்தை அறிய புதிய செயலியை தொடங்குகிறது கோவின்

கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திரமோடி,  கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியதில் இருந்து, இதுவரை 72  கோடிக்கும் மேற்பட்ட, தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வழங்க, ஒவ்வொரு தனி நபருக்கும் கோ-வின் இணையதளம் ஏற்கனவே, டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
 
இந்த சான்றிதழை ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் அல்லது டிஜி லாக்கரில் சேமிக்க முடியும் மற்றும் தேவைப்படும்போது தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக காட்ட முடியும்.  இந்த சான்றிதழ் தேவைப்படும் நுழைவிடங்களான, மால்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இந்த சான்றிதழ்களை காகித வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் காட்டலாம்.
 
முன்பதிவு செய்யும் பயணிகளின் தடுப்பூசி நிலவரத்தை அறிய ரயில்வே, விமான நிறுவனங்கள், விடுதிகள்   விரும்பலாம்.இவர்களின் வசதிக்காக, புதிய செயலியை கோ-வின் உருவாக்கியுள்ளது.

இதில் ஒருவரின் பெயர் மற்றும் போன் எண்ணை டைப் செய்தால், அவர்களுக்கு ஓடிபி வரும். அதை டைப் செய்தபின் ‘0’ என வந்தால், தடுப்பூசி போடவில்லை என்றும், 1 என வந்தால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார் எனவும், 2 என வந்தால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார் என தெரிவிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...