குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போலீசார் விசாரணை..!

சமூக நலன்

குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போலீசார் விசாரணை..!

குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த  சிலைகள் உடைப்பு : போலீசார்  விசாரணை..!

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழகாட்டுவிளையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயியில் ஒரு குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் பூஜைகள் நடத்துவது வழக்கம். இதை அப்பகுதியை சேர்ந்த காலபெருமாள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார்.இதனை தொடர்ந்து 2 வாரம் பூஜைகள் நடத்தவில்லை. மேலும் இந்த கோயில் சார்பில் மாதாந்திர சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் குலுக்கல் நடத்துவது வழக்கம். நேற்றுமுன்தினம் ஐப்பசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாதாந்திரசீட்டு குலுக்கல் கோயிலில் நடந்துள்ளது.

6 ஆடி உயர சுடலைமாடன் சிலையின் இரு கைகளையும் உடைப்பு

பின்னர் அனைவரும் கோயிலில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற காலபெருமாளின் மகன் விஜயராகவன்(38), கோயில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி சுசீந்திரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து புகுந்து அங்கிருந்த கல்விளக்கையும், சுவாமி சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்து நாகர்சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் நின்ற 6 ஆடி உயர சுடலைமாடன் சிலையின் இரு கைகளையும் உடைத்து எறிந்துள்ளனர். கோயிலின் மூலஸ்தான கதவை உடைத்த மர்மநபர்கள், இசக்கிஅம்மன் சிலையை உடைக்கவில்லை. மேலும் கோயில் நிர்வாகத்துக்குள் ஏதாவது பிரச்னை இருந்து சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதா என முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

Leave your comments here...