ஊழலில் சிக்கும் அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்து சிவிசி அறிக்கை..!

இந்தியா

ஊழலில் சிக்கும் அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்து சிவிசி அறிக்கை..!

ஊழலில் சிக்கும் அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்து சிவிசி அறிக்கை..!

மத்திய அரசு துறைகளில் ஊழலில் சிக்கும் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதில் 42 வழக்குகளில் சி.வி.சி.யின் அறிவுரைகள் பின்பற்றப்படவில்லை என ஆணையம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இதில் 10 வழக்குகள் ரெயில்வே தொடர்பானதும், 5 வழக்குகள் கனரா வங்கி தொடர்பானதும் ஆகும்.

இந்த நிறுவனங்களை தவிர சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி போன்ற துறைகளை சார்ந்த வழக்குகளிலும் ஆணையத்தின் அறிவுரை பின்பற்றப்படாதது குறித்து அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சி.வி.சி.யின் அறிவுரைக்கும், நடைமுறைக்கும் இடையேயான வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டு இருந்ததாகவும், இதுகுறித்த அறிக்கை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் இணையத்திலும் ஏற்றப்பட்டிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. 

ஆணையத்தின் ஆலோசனையை ஏற்காதது அல்லது ஆணையத்துடன் கலந்தாலோசிக்காதது, விழிப்புணர்வு செயல்முறையை பாதிப்பதுடன், ஆணையத்தின் பக்கசார்பற்ற தன்மையை பலவீனப்படுத்துவதாகவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.

Leave your comments here...