சாதனையாளர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

இந்தியா

சாதனையாளர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

சாதனையாளர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

கலை, இலக்கியம், சினிமா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியான சாதனியாளர்கள் குறித்து சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “பத்ம விருதுகளை மக்களின் விருதாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. ஆகவே பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடையே பத்ம விருது அளித்து கவுரவிக்க தகுதியான சாதனையாளர்களையும், சமூகத்துக்கு சுயநலமின்றி சேவை செய்பவர்களையும் பொதுமக்கள் அடையாளம் கண்டு சிபாரிசு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பத்ம விருதுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே சிபாரிசுகளையும், விண்ணப்பங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான பிரத்யேக வலைத்தளத்தில் இப்பணி நடந்து வருகிறது. சிபாரிசுகளை தாக்கல் செய்ய 15-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

வலைத்தளத்தில் உள்ள படிவத்தி்ல் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். சாதனையாளர்களின் சாதனை, சேவை குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாமல் கருத்துரை எழுத வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தை பார்க்கலாம்.”

Leave your comments here...