ஜம்மு & காஷ்மீரில் முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியில் புதிய உதயம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியா

ஜம்மு & காஷ்மீரில் முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியில் புதிய உதயம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஜம்மு & காஷ்மீரில் முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியில் புதிய உதயம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஜம்மு & காஷ்மீரில் தொழில் வளர்ச்சிக்கான மத்திய துறை திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதற்கான ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா, “இது ஜம்மு & காஷ்மீரில் முதலீடு மற்றும் வணிக வளர்ச்சியில் புதிய உதயம்,” என்று கூறினார். ரூ 50,000 கோடிக்கும் அதிகமான முதலீடு ஜம்மு & காஷ்மீரில் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம், தொழில்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியுஷ் கோயல், ஆன்லைன் தளம் மற்றும் மத்திய துறைத் திட்டங்களின் தொடக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றார். வர்த்தகம் செய்வது இதன் மூலம் எளிதாகி, அனைத்துக் கட்டங்களிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், வர்த்தகம், தொழில்கள் இணை அமைச்சர்கள் சோம் பிரகாஷ் மற்றும் அனுப்பிரியா பட்டேல் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை மிக்க வகையில் சிறப்புடன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலும் இந்த ஆன்லைன் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செயல்முறையையும் மனிதத் தலையீடு இல்லாமலேயே செய்ய இயலும்.

Leave your comments here...