ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 போர் விமானம் விபத்து.!

இந்தியா

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 போர் விமானம் விபத்து.!

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 போர் விமானம் விபத்து.!

ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 போர் விமானம் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டு இருந்தது.

புர்டியா கிராமத்தில் பயிற்சியில் இருந்தபோது விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானி விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளார்.

விமானம் விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும், இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave your comments here...