ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர மின்னணு விசா கட்டாயம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியா

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர மின்னணு விசா கட்டாயம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர மின்னணு விசா கட்டாயம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் இ- விசா மூலம் மட்டுமே இந்தியாவுக்கு வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு விசா நடைமுறையை சீர்படுத்துவதற்காக அவசரகால விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியாவிற்கு பயணிக்கும் அனைத்து ஆப்கான் மக்களும் மின்னணு விசாவை பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில ஆப்கான் மக்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை தொலைத்துவிட்டதாக வெளிவரும் செய்திகளைக் கருத்தில் கொண்டு, தற்போது இந்தியாவில் வசிக்காத ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட விசாக்கள் தற்போதிலிருந்து செல்லுபடியாகாது.

இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கான் மக்கள் http://www.indianvisaonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் மின்னணு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

Leave your comments here...