கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி – மதுரையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு.!

சமூக நலன்தமிழகம்

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி – மதுரையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு.!

கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பேரணி – மதுரையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு வரவேற்பு.!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் தென்மண்டல சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று மாலை மதுரை வந்தடைந்தனர்.

மதுரை கீழக்குயில் குடியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் வீரர்கள் திண்டுக்கல் நோக்கி கிளம்பி சென்றனர்.

கன்னியாகுமரியில் 2 தினங்களுக்கு முன் தொடங்கிய சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணியை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார். “ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ் “என்ற தலைப்பில் , மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 20 பேர் சிஆர்பிஎப் உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையில், டெல்லி ராஜ்பவன் வரை சுமார் 2 ஆயிரத்து 850 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி செல்கின்றனர்.

இந்த சைக்கிள் பேரணி நமது நாட்டின் சகோதரத்துவம், சமூக நீதி, மதசார்பின்மை போன்ற கோட்பாடுகளை பேணிகாப்போம் என்ற உறுதியை வலியுறுத்தி நடைபெறுவதாக சிஆர்பிஎப் வீரர்கள் கூறினர்.

கன்னியாகுமரி திருவேணி சங்கமத்தில் தொடங்கி, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை , திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் , ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா சென்று, தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் மாநிலங்கள் வழியாக சென்று, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று டெல்லிக்கு சென்றடைவோம் என்று கூறினார்.

மதுரை மாவட்டத்தில் வழியெங்கும் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு கொடுத்தனர். வீரர்கள் திண்டுக்கல் நோக்கி தங்கள் சைக்கிள் பேரணியை துவக்கினர்.

Leave your comments here...