‛அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம்

தமிழகம்

‛அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம்

‛அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார். சென்னை ஆர்.டி.எம்.புரத்தில் கடந்த 14ஆம் தேதி நடந்த நிகழ்வில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த 24 பேர் உட்பட 58 பேருக்கு, பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவித்துள்ளதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஹிந்துக் கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும். பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசுக்கு நல்லது கிடையாது.

எனவே, இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். பாரம்பரியம் மாறாமல் பூஜைகள் நடை பெறுவதற்கு இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்து உத்தரவு போடுவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...