இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: 6 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு

உள்ளூர் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: 6 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு: 6 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 6 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் குருமூர்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்குகளில், ‘இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஆனால், இந்துக்கள் வழிபடும் கோவில்களை கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இந்து கோவில்களை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் மாறி, கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தாலும், கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளன.

இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லுகின்ற நிலையில், இந்து கோவில்கள் மீது மட்டும் அரசு ஆதிக்கம் செலுத்துவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. அறநிலையத்துறை சட்டத்தின் மூலம் கோவில்களை நிர்வகிப்பதில் எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் கோவில்களை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது என்பதை அனுமதிக்க முடியாது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இந்த வழக்குகளின் ஆவணங்களை அரசுத் தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Leave your comments here...