வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை.!

இந்தியாஉலகம்

வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை.!

வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில்  ஈடுபட்ட இந்திய கடற்படை.!

தென் சீன கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் பணியமர்த்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் 2021 ஆகஸ்ட் 18 அன்று இந்திய கடற்படை ஈடுபட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இந்திய-வியட்நாம் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

2021 ஆகஸ்ட் 15 அன்று வியட்நாமில் உள்ள காம் ரன்ஹை இந்திய கடற்படை கப்பல்கள் சென்றடைந்தன. கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி பணிரீதியான உரையாடல்கள் உள்ளிட்டவை துறைமுகப் பிரிவில் நடைபெற்றன.

போர் பயிற்சிகள், ஆயுத பயிற்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்டவை கடல் பிரிவில் நடைபெற்றன. கடந்த பல வருடங்களாக இரு கடற்படைகளுக்கிடையே நடைபெற்று வரும் தொடர் உரையாடல்கள் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளன.

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை இந்திய கடற்படை கப்பல்கள் வியட்நாமில் கொண்டாடிய நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளுக்கிடையே வலுவான ராணுவ உறவு நிலவி வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதத்தில் இரு நாடுகளும் ராணுவ பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மேற்கொண்டன.

Leave your comments here...