24 மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை இறக்கி புதிய சாதனை – தூத்துக்குடி வஉசி துறைமுகம்.!

இந்தியா

24 மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை இறக்கி புதிய சாதனை – தூத்துக்குடி வஉசி துறைமுகம்.!

24 மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை இறக்கி புதிய சாதனை – தூத்துக்குடி வஉசி துறைமுகம்.!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 15.8.2021 அன்று, 24 மணி நேரத்தில் மிக அதிகமாக, 57,090 டன் நிலக்கரியை ‘எம்.வி. ஸ்டார் லாரா’ கப்பலிலிருந்து இறக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 27.10.2020 அன்று ‘எம்.வி ஓஷன் ட்ரீம்’ கப்பலிலிருந்து கையாளப்பட்ட 56,687 டன் நிலக்கரியை விட இது அதிகமானதாகும். இந்த ஆண்டில், மிக அதிகமாக, ஒரே நாளில் 1,82,867 டன் சரக்குகளைக் கையாண்ட பெருமையையும் இந்த துறைமுகம் பெற்றுள்ளது.

மார்ஷல் தீவுகள் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. ஸ்டார் லாரா’ கப்பல், 77,675 டன் நிலக்கரியை, இந்தியா கோக் அண்ட் பவர் என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக இந்தோனேசியாவில் உள்ள மௌரா பெரௌ துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. இதில் தூத்துக்குடி இம்கோலா கிரேன் நிறுவனத்தின் சுமை தூக்கிகளால் 57,090 டன் நிலக்கரி 24 மணி நேரத்திற்குள் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது.

இத்தகைய சாதனையில் ஈடுபட்ட பங்குதாரர்களை வ. உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் பாராட்டியதோடு, சரக்குப் போக்குவரத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, செயல்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதில் இந்தத் துறைமுகம் தொடர்ந்து கடினமாக உழைப்பதாகத் தெரிவித்தார்.

Leave your comments here...