சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து ஈ.வெ.ரா. பெயரை நீக்கிட வேண்டும் – முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை..?

அரசியல்

சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து ஈ.வெ.ரா. பெயரை நீக்கிட வேண்டும் – முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை..?

சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து  ஈ.வெ.ரா. பெயரை நீக்கிட வேண்டும் – முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை..?

சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து ஈ.வெ.ரா. பெயரை நீக்கிட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தமிழக அரசின் சார்பில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை. உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார்கள்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தும் பொழுது வீரன் அழகுமுத்துக்கோன் அவருடைய பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதுமுள்ள கோனார் சமுதாயத்தினர் அதாவது யாதவ சமுதாயத்தினர் மிகவும் அதிருப்தி அடைந்து உள்ளார்கள்.

அதேபோல தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமிகாந்தன் பாரதி அவர்களின் மனம் வேதனை அடையும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.பரவலாக தமிழ்நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களை உரிய முக்கியத்துவம் கொடுத்து மரியாதை செலுத்தாமல் திமுக அரசு நடந்து கொண்டது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மு க ஸ்டாலின் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை வரிசைப்படுத்தும் போது அதில் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன, சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கடைபிடித்த, சுதந்திர தினத்தன்று கருப்பு கொடி ஏற்றிய ஈ.வெ.ராமசாமி அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர் என்று குறிப்பிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறோம். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்களை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். தொண்ணூற்று ஐந்து வயதான சுதந்திர போராட்ட வீரர் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி அவர்கள் மனம் புண்படும்படி நடந்துகொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுக்க இருக்கின்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கின்றார்கள் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் உள்ள அவர்களை எல்லாம் அழைத்து உரிய மரியாதை செலுத்திட வேண்டும்.

தமிழக அரசாங்கத்தின் சார்பில் இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு பவள விழாவினை இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை வரலாற்றை பாட புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். சுதந்திரம் வேண்டாம்’ என்ற திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா.வை சுதந்திர போராட்ட வீரர் எனக் குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து ஈ.வெ.ரா. பெயரை நீக்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave your comments here...