தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு அனுப்பப்படும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

உலகம்

தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு அனுப்பப்படும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு  அனுப்பப்படும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

ஆப்கனில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து அந்நாட்டின் பெயர் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி, தன்நாட்டு மக்களை பத்திரமாக அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமெரிக்க படைகளை அதிபர் பைடன் திரும்ப பெற்ற விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கியது போன்றவை விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில் ஆப்கன் விவகாரம் குறித்து இன்று பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது பைடன கூறியதாவது:ஆப்கனில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், ஆப்கனில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை’.

மேலும் அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாகவும், எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும். ஆப்கன் அரசும், படையும் தலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது, போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தானில் இன்று குறைந்திருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க அதிபர், தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு ஜோ பைடன் தான் காரணம் என்று, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளனர். அவர், கொரோனாவுக்கு எதிரான போர், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, அமெரிக்க படையை வாபஸ் பெற்றது என அனைத்திலும் தோல்வி கண்டதாக சாடினார். எனவே, இவற்றுக்கு பொறுப்போற்று அதிபர் பதவியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

அப்போது பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனிய குட்டரெஸ், ஆப்கன் நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார். அங்குள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அங்கிருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள் மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாகவும் கூறினார். எனவே, இக்கட்டான இந்த சூழலில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்றும் அன்டோனியா குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து திரும்ப பெற்றதற்காக ஆப்கன் ஆதரவு அமைப்புகள் அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...