காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் சுஷ்மிதா தேவ்

அரசியல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் சுஷ்மிதா தேவ்

காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் சுஷ்மிதா தேவ்

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவரும் (மகிளா காங்கிரஸ் தலைவர்) முன்னாள் எம்.பி.,யுமான சுஷ்மிதா தேவ், தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்., தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், ‛பொது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறேன். ஆதலால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன்.

காங்கிரஸ் கட்சியுடன் 30 ஆண்டுகால உறவு மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் ஆசீர்வாதத்துடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறேன்,’ எனக் குறிப்பிட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலகினேன்? என்பதற்கான எந்தக் காரணத்தையும் சுஷ்மிதா தேவ் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சுஷ்மிதா தேவ், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் டெரெக் ஓ பிரையன் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..

Leave your comments here...