பாஜக சிறுபான்மை அணி சார்பில் மதநல்லிணக்க கூட்டம் – பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ரஹிம் பங்கேற்பு..!

அரசியல்

பாஜக சிறுபான்மை அணி சார்பில் மதநல்லிணக்க கூட்டம் – பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ரஹிம் பங்கேற்பு..!

பாஜக சிறுபான்மை அணி சார்பில் மதநல்லிணக்க கூட்டம் – பாஜக தேசிய செயலாளர் வேலூர்  இப்ரஹிம் பங்கேற்பு..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் மண்டபத்தில், பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையினர் அணி சார்பாக மதநல்லிணக்க கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் சையது இப்ரஹிம் தலைமையில் நடைபெற்றது.

புறநகர் மாவட்ட தலைவர் ராயப்பன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் சிறுபான்மை அணி தலைவர் தேவ்ஜில் வரவேற்புரை கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் சையது இப்ரஹிம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்:- பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்டத்தின் சார்பாக மதநல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் மீது ஏற்படக்கூடிய விமர்சனங்களை அவர்கள் தெரிவித்தார்கள் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சித்தாந்தத்தை பற்றியும் இந்த கட்சி அனைத்து மதத்தையும் மதிக்கக் கூடிய அனைத்து மதத்தினுடைய மக்களுடைய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரக்கூடிய கட்சி என்பதை அவர்களுக்கு உணர்த்த இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் பாரதிய ஜனதா கட்சியில் பேசக்கூடிய அந்த தவறான பேச்சுக்களின் போது அது கட்சியின் கொள்கையாக கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும் நாம் புரிய வைத்திருக்கிரரறோம். இதுபோன்ற மத நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க நடைபெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் சார்பாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த கூட்டம் ஒரு முன்னோட்டமாக தான் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வந்திருந்த இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் கட்சியினுடைய கொள்கைகளைப் புரிந்து கொண்டு மனநிறைவோடு சென்றார்கள் என்பதை முதலில் நான் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான இரண்டு செய்திகளை நான் சொல்ல வேண்டி இருக்கிறது குறிப்பாக இன்றைக்கு பாரத தேசம் முழுவதும் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியில் அதிகமாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி ,இணைந்து கொள்வதை பொறுக்க முடியாத பயங்கரவாத பிரிவினைவாத சக்திகளின் அங்கு இருக்கக்கூடிய தேசவிரோத எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து இஸ்லாமிய மக்களையும் கிருத்துவர்களின் அச்சுறுத்துகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் குலாம் ரசூல் தான் என்று சொல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவர் இசுலாமியர் அவர் கட்சிக்காக பாடுபட்டு இசுலாமிய மக்களை அதிகமாக பாஜகவில் இணைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் பயங்கரவாத சக்திகள் அவர் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவருடைய மனைவியும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் .

அதேபோன்று, நேற்றைய தினம் சத்தர்ச் என்று சொல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சி என்று மண்டல் தலைவர் சிறுபான்மை அணியை உருவாக்கி அதன்மூலம் பல பேரை பாரதிய ஜனதா கட்சி இணைத்துள்ளார். இதற்காக , அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையாக தாக்கி இன்றைக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மேற்கு வங்கத்திலும் இதேபோன்று இஸ்லாமியர்களை பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்களை தொடர்ந்து தாக்கி அவர்களை மருத்துவமனையில் இருக்கிறார்.

தமிழகத்தில் மதுரையில் இது போன்ற நிலை இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில் திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பாரதிய ஜனதா கட்சியை கொண்டு செல்லக்கூடிய எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை. நாங்கள் சொல்ல வேண்டி இருக்கிறது குறிப்பாக மதுரையில் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத செயல்களை இளைஞர்களுக்கு மத்தியில் ஊக்குவிக்கக் கூடிய அமைப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கக்கூடிய பகுதிகளில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தொடர்ந்து இந்த தேசத்திற்கு எதிராக அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சி உடைய மதுரை புறநகர் மாவட்ட தலைவர் உடைய அலுவலகத்திற்கு கத்தியோடு சென்று தாக்கி இந்த நிகழ்வு அத்வானி அவர்கள் இங்கு வரும் பொழுது குண்டுவைத்து வெடிப்பதற்கான நிகழ்வு மட்டுமல்லாமல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இருக்கக்கூடிய ஒரு சில பயங்கரவாத சக்திகள் முயற்சி செய்து என்ஐஏ அமைப்பு அவர்களை நேரடியாக வந்து கைது செய்த நிகழ்வு பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது மதுரை மாவட்டத்திற்கு வருகின்ற எங்களைப்போன்ற அச்சுறுத்தலை சந்தித்துக்கொண்டிருக்கும் நபர்கள் வரும்பொழுது காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்காமல் இருப்பது ஒரு மட்டுமல்லாமல் இஸ்லாமிய பகுதிகளில் நாங்கள் செல்லும் பொழுது அதற்கு தடை விதிக்கிறார்கள்.
இதை நாங்கள் கடுமையாக பதிவு செய்கிறோம்.

தமிழக முதல்வர் , இங்கு அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக எந்த கட்சியினுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர் உதவி செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசப்பற்றுள்ள மக்களை உருவாக்கக்கூடிய கட்சி மதம் மொழி இனம் கடந்து அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள் என்ற ஒற்றை கோட்பாட்டில் கொண்டு செல்லக்கூடிய கட்சி இந்த கட்சியின் கொள்கையை இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் புரிந்துகொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய குறிக்கோள். அந்த குறிக்கோளை ஒட்டி நாங்கள் இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை முடக்கி விட்டுஉள்ளோம்.

எங்களுடைய பிரச்சாரம் தொடரும் தமிழக காவல்துறை எங்களை முடக்காமல் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இதன் மூலம் நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.

கேள்வி சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது திமுக ஆட்சியில் தான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கோவை கலவரம் நடந்தது திமுக ஆட்சிக் கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது திமுக ஆட்சியில் கோவையில் கண்டுபிடிக்கப்பட்டது திமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் தான்.என தேசிய, சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் செய்தி இப்ராகிம் கூறினார்..

Leave your comments here...