பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

தமிழகம்

பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார்.

அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் ரூ.100க்கும் கீழ் குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை.

ஆம், சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.3.02 காசு குறைந்து ரூ.99.47 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், டீசல் விலை 28வது நாளாக மாற்றமின்றி ரூ.94.39-க்கு விற்பனையாகிறது.

Leave your comments here...