11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.!

தமிழகம்

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.!

ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரைட்டன்பட்டி பகுதியில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டு வரும் பெந்தகோஷ் சபையில் பாதிரியாராக உள்ள கிறிஸ்துதாஸ் வயது (43) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாதரியார் வீடு வீடாக சென்று ஜெபம் நடத்தி வருபவர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமியின் தாய், அவரது சகோதரிகள் மூன்று பேர் பாதிரியாரின் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிரியார் வீட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றிருந்தார். அந்த குடும்பத்தில் உள்ள சிறுமி மட்டும் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அடிக்கடி தனியாக இருந்த அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி அவரது தாயிடம் பாதிரியார் கிறிஸ்துதாஸ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave your comments here...