2021-22ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்..?

தமிழகம்

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்..?

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்..?

2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார்.
துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்:-

*சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ. 4,807 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*தமிழக போலீசாருக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
*தீயணைப்பு துறை ரூ.405.13 கோடி
*பேரிடர் மேலாண்மை துறைக்கு ₹1,360 கோடி ஒதுக்கீடு.
*சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடி
*நீதித்துறை நிர்வாகத்திற்கு ரூ.1,713.30 கோடி
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கு ரூ.8,437.57 கோடியாக அதிகரிப்பு
*29 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி
*பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி
*ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.300 ஆகவும், பணிநாட்களை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
*நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி
*மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி
*6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும்
*மீனவர்கள் நலனுக்காக ரூ. 1,149.79 கோடி
* 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்
*610 கோடி செலவில் நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*தமிழ்நாடு நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்
*மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்த்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை

வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
*காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவால்
*தமிழகத்தின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதம் உயர்த்த ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்ககம், முதல்வர் தலைமையில் உருவாக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
* 2021-22ம் ஆண்டில் 2,49,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி
* கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.2000 கோடி
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
* மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ரூ.809.79 கோடி
*அம்ருத் திட்டததிற்கு ரூ.1450 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் ரூ.1,000 கோடி
*சென்னையில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு
*எம்எல்ஏ மேம்பாட்டு திட்டங்களுக்கு தலா ரூ.3 கோடி வழங்கப்படும்
*சென்னையி்ல 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு
*பள்ளிகல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5369.09 கோடி
*மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933.20 கோடி

நெடுஞ்சாலைகள் மேம்பாடு
* ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க ரூ.623.59 கோடி
*நெடுஞ்சாலை துறைக்கு 17,899.17 கோடி
*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2350 கோடி
*சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் 1,750 கோடி
*16 மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாடு ரூ.6448.28 கோடி
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம் வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி
*கொரோனா கால நிவாரணமாக ரூ.9370.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
*நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி

மதுரையில் மெட்ரோ ரயில்
*சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2,371 கோடி
*சென்னையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி ஒதுக்கீடு
*குடிசை மாற்று வாரியம் திட்டங்களுக்கு ரூ.3954.44 கோடி
*மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு டீசல் மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு
*79,395 குக்கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர்.
*தேவையுள்ள இடங்களில் புதிய ரேஷன் கடைகளை ஏற்படுத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கு குழு ஏற்படுத்தப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
*திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் செயல்படுத்தப்படும்.

* நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண்சாலைகள் தரம் உயர்த்தப்படும்
*சென்னை – குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்
*சிங்கார சென்னை 2.0 பணிகள் துவங்கப்படும்.
*புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் ஏற்படுத்தப்படும்.
*மெட்ரோ 2ம் கட்ட பணிகள் 2026ல் முடிவடையும்
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்
*கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 4 ஆண்டுகளுக்குள் துவங்கும்
*தமிழகத்தை மின்மிகை மாநிலம் எனக்கூறுவது தவறு.
*2500 மெகாவாட் மின்சாரத்தை மின்சந்தையில் கொள்முதல் செய்தே தமிழக அரசு சமாளிக்கிறது.
*மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
*கற்றல் செயல்பாட்டில் முதல் 3 இடங்களில் தமிழகத்தை கொண்டு வர நடவடிக்கை.
* 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும்
*ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.20.76 கோடி
* அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதிசெய்ய எண்ணும் எழுத்தும் இயக்கத்திற்கு ரூ.66.70 கோடி
* அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதிசெய்ய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்க ரூ.114.18 கோடி
*ரூ.10 கோடியில் 25 கலை அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*மலைப்பாங்கான தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப்பள்ளிகள் புதிதாக அமைக்கப்படும்.
*413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கணினிகள் 13.22 கோடியில் ஏற்படுத்தப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
*தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் துவங்கப்படும்
*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி
*108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1,033 ஆக உயர்த்தப்படும்.
* குடிசை மாற்று வாரியம் ரூ.3955.44 கோடி

* ஆதிதிராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு மொத்த செலவீனம் ரூ.14,696.60 கோடி
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டம் ரூ.1884.70 கோடி
* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நலனுக்கு ரூ. 4142.33 கோடி
* குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ரூ. 2536.69
* எம்ஜி ஆர் மதிய உணவு திட்டம் ரூ.1,725.41
* 3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி
* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கு ரூ.2,536.69 கோடி
* கல்விக்காக வெளிநாடு செல்ல ரூ.5 கோடி உதவி
* வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ரூ.60 கோடி
* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய மானியம் ரூ.215 64 கோடி
* மசூதிகள் மற்றம் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி
* புவியியல் புகைபடிவ பூங்கா ரூ.10 கோடி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி
* கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ரூ.123.02 கோடி

* விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதனம் ரூ.25 கோடி
* முனைவர் பட்ட கல்வி உதவித்தொகை திட்டம் ரூ.16 கோடி
* 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்
* மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளருக்கே வழங்கப்படும்
*வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு பல்வேறு அம்சங்களை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Leave your comments here...