பிரதமரின் தொழிலாளர் விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தின் திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு விருது.!

இந்தியாதமிழகம்

பிரதமரின் தொழிலாளர் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் எம்.பாலமுருகன் (கைவினைஞர்-II) மற்றும் எம்.குருநாதனுக்கு (துணைப் பொறியாளர்) ஷ்ரம் பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.மதுசூதன் (பணியாளர்), எம்.செந்தில்குமார் (கைவினைஞர்-II (பணியாளர்)), கே.பாலமுருகன் (கைவினைஞர்-II (பணியாளர்)) மற்றும் முங்கரா தன ராஜூக்கு (கைவினைஞர்-II (பணியாளர் பிரிவு)) ஷ்ரம் வீர்/ வீரங்கனா விருது வழங்கப்படவுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரிந்த 69 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு பிரதமரின் தொழிலாளர் விருதுகள் ஷ்ரம் பூஷன் (தலா ரூ. 1,00,000 ரொக்கப் பரிசு), ஷ்ரம் வீர்/ வீரங்கனா (தலா ரூ. 60,000 ரொக்கப் பரிசு) மற்றும் ஷ்ரம் ஸ்ரீ/ ஷ்ரம் தேவி (தலா ரூ. 40,000 ரொக்கப் பரிசு) ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

விருது அறிவிக்கப்பட்டவர்களுள் 49 பேர் பொதுத்துறை நிறுவனங்களையும், மீதமுள்ள 20 பேர் தனியார் துறையையும் சேர்ந்தவர்கள். விருது பெறுபவர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...