கொரோனா அலை : புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் 23-ம் தேதி முதல் திறப்பு.!

ஆன்மிகம்இந்தியா

கொரோனா அலை : புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் 23-ம் தேதி முதல் திறப்பு.!

கொரோனா  அலை : புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் 23-ம் தேதி முதல் திறப்பு.!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, கோவில் பணியாளர்களின் குடும்பத்தார் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது கட்டமாக பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வருபவர்கள் கோவில் நிர்வாகம் வழங்கிய அடையாள அட்டையுடன் அரசு அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் உள்ளூர்வாசிகளும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஏப்ரல் 24ஆம் தேதி மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...