கணவர் மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் மனைவி.!

இந்தியா

கணவர் மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் மனைவி.!

கணவர் மறைந்த சோகம் தாங்காமல் கோயில் கட்டி வழிபடும் மனைவி.!

கணவர் இறந்தாலும் தன்னுடனேயே இருக்க வேண்டும் என எண்ணி கணவருக்கு கோயில் கட்டி மனைவி ஒருவர் வழிபாடு நடத்தி வருகிறார்.

ஆந்திரபிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனித்துவமான சம்பவம் ஒன்று பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. மறைந்த கணவருக்காக கோவில் கட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி என்ற பெண். பத்மாவதி என்ற பெண் மிகவும் பழமைவாதம் மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்.

அவரது தாயை போன்று இவரும் கணவரை மிகவும் நேசித்து வருகிறார். அங்கிரெட்டி-பத்மாவதி திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் 4 வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி அங்கிரெட்டி உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்து வந்துள்ளார். பத்மாவதியின் கனவில் அவரது கணவர் அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலில் தனது கணவரின் பலிங்கு உருவ சிலையும் அவர் நிறுவி உள்ளார்.கணவர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

மேலும் இந்த கோவிலில் பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். இந்த கோவிலை கட்டுவதற்கு அவரது மகன் சிவசங்கர் ரெட்டி மற்றும் அங்கிரெட்டியின் நண்பர் திருப்பதி ரெட்டி உதவி புரிந்ததாக பத்மாவதி தெரிவித்துள்ளார். இந்த தம்பதியனருக்கு மகனாக பிறந்தது என்னுடைய பாக்கியம் என்று சிவசங்கர் ரெட்டி பெருமையுடன் கூறி வருகிறார்.

Leave your comments here...