காவல்துறை நவீனமயமாக்கல் : கடந்த 3 ஆண்டில் ரூ.25,061 கோடி செலவு… தமிழகத்துக்கு ரூ.141.03 கோடி – மத்திய அமைச்சர் தகவல்

இந்தியா

காவல்துறை நவீனமயமாக்கல் : கடந்த 3 ஆண்டில் ரூ.25,061 கோடி செலவு… தமிழகத்துக்கு ரூ.141.03 கோடி – மத்திய அமைச்சர் தகவல்

காவல்துறை நவீனமயமாக்கல் : கடந்த 3 ஆண்டில் ரூ.25,061 கோடி செலவு… தமிழகத்துக்கு ரூ.141.03 கோடி – மத்திய அமைச்சர் தகவல்

காவல் துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 3 ஆண்டில் ரூ.25,061 கோடி செலவு செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். ஆனாலும், காவல்துறை நவீனமயமாக்கத்துக்கான திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. 2017-18ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு காவல்துறை நவீனமயமாக்கத்துக்கான மொத்த செலவு ரூ.25,061 கோடி. இதில் மத்திய அரசின் செலவு ரூ.18,636.30 கோடியும் அடங்கியுள்ளது.

இத்திட்டம் 2020-21ம் ஆண்டுக்கும் தொடரப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில் காவல் துறை நவீனமயமாக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செலவு என இரு பிரிவுகள் உள்ளன. குற்றம் மற்றும் குற்றவாளி கண்காணிப்பு நெட்வொர்க் (CCTNS), மின்னணு சிறைகள் திட்டம் போன்ற துணை திட்டங்களும் இதில் அடங்கும். குற்றம் மற்றும் குற்றவாளி கண்காணிப்பு நெட்வொர்க் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.1949 கோடி. மின்னணு சிறை திட்டத்துக்கான செலவு ரூ.100 கோடி.

இடதுசாரி தீவிரவாதம் உள்ள மாநிலங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.583.03 கோடி செலவிடப்பட்டது. காவல்துறை வயர்லெஸ் மேம்பாட்டுக்கு ரூ.34.41 கோடி செலவிடப்பட்டது. மாநிலங்கள் வாரியாக பல திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தொகை பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் நவீனமயமாக்கத்துக்கு ரூ.141.03 கோடி வழங்கப்பட்டது.

சட்டவிரோத குடியேறிகள் பற்றிய கொள்கை: சர்வதேச எல்லைகளில் உள்ள மலைகள் மற்றும் ஆறுகள் வழியாக சிலர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். இந்த சட்டவிரோத ஊடுருவலை தடுக்க பன்முக அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. எல்லையில் வேலிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஊடுருவலுக்கு சாத்தியமுள்ள எல்லைப் பகுதிகளில் விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை முறை என்ற தொழில்நுட்ப தீர்வும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து, கண்காணிப்பு பணிகளுடன், சுரங்கப்பாதைகள் மூலம் ஊடுருவலை தடுக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave your comments here...