2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு – ஜல்ஜீவன் திட்டம்

இந்தியா

2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு – ஜல்ஜீவன் திட்டம்

2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் இணைப்பு – ஜல்ஜீவன் திட்டம்

மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டம், 2024ம் ஆண்டுக்குள், அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அனைத்து ஊரக வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ், இதுவரை 4.68 கோடி ஊரக வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்சக்தி அமைச்சக ஆவணங்கள்படி, தமிழகத்தில், 1.26 கோடி ஊரக வீடுகளில், 43.48 லட்சம் வீடுகளுக்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளது. திருச்சி நகரின் பல பகுதிகளுக்கு குடிநீர் காவிரியிலிருந்து கிடைத்தாலும், மாவட்டத்தின் சில பகுதிகளில் சுத்தமான குடிநீர் இல்லை. இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஜல்ஜீவன் திட்டம் ஒரு வரமாக உள்ளது.

இத்திட்டம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை உறுதி செய்கிறது. தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 3.84 லட்சம் ஊரக வீடுகளில், 52 சதவீதம், அதாவது 2 லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக தாயனூர் பஞ்சாயத்து கீழாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவயானி, மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் குடிநீர் எடுத்துவர வெகு தூரம் நடந்து சென்றதாக அவர் கூறினார். கடந்த 2020-21ம் ஆண்டில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இங்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் இங்குள்ள மக்கள் தடையற்ற குடிநீரை பெறுகின்றனர்.

தாயனூர் பஞ்சாயத்து கீழாபுரத்தைச் சேர்ந்த தேவயானி.

இத்திட்டத்தின் கீழ் தாயானூர் பஞ்சாயத்தில், 55 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டன. இந்த கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் கூறுகையில், முன்பு குடிநீர் எடுத்து வர அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் மிகவும் சிரமமாகவும், களைப்பாகவும் இருந்தது. ஆனால் தற்போது ஜல்ஜீவன் திட்டத்தால், வீட்டிலேயே குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது என்றார்.

பெரியநாயகி சத்திரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த எஸ் ஜெகதாம்பாள் கூறுகையில், ‘‘ ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீட்டிலேயே குடிநீர் கிடைக்கிறது. முன்பு குடிப்பதற்கும் மற்றும் சமையல் செய்வதற்கும் தண்ணீர் கிடைப்பது மிக சிரமமாக இருந்தது. வயதான காலத்தில் வெகு தொலைவிற்கு நடப்பது சிரமமாக இருந்தது’’ என்றார்.

பெரியநாயகி சத்திரம் பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் கூறுகையில், ‘‘ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், இந்தாண்டு 70 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. இவை, இங்குள்ள குடும்பங்களுக்கு உதவியாக உள்ளது. இந்த கிராமத்தில் 350 வீடுகள் உள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டம் ஊரக பெண்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. முன்பு, அவர்கள் பல மைல் தூரம் நடந்து சென்று தலையில் பானைகளை சுமந்து வீடு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ஜல்ஜீவன் திட்டத்தால், குடிநீர் வீட்டு வாசலிலேயே கிடைப்பதால், அவர்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. ஜல்ஜீவன் திட்டம், உண்மையிலேயே, புரட்சிகரமான திட்டம். 2024ம் ஆண்டுக்குள், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Leave your comments here...