கென்ய போர்க் கப்பலுடன், ஐஎன்எஸ் தல்வார் கூட்டுப் பயிற்சி.!

இந்தியா

கென்ய போர்க் கப்பலுடன், ஐஎன்எஸ் தல்வார் கூட்டுப் பயிற்சி.!

கென்ய போர்க் கப்பலுடன், ஐஎன்எஸ் தல்வார் கூட்டுப் பயிற்சி.!

‘கட்லஸ் எக்ஸ்பிரஸ்’ பயிற்சியை முடித்தபின், ஐஎன்எஸ் தல்வார் போர்க்கப்பல், கென்ய போர்க் கப்பல் சூஜாவுடன், கடல்சார் கூட்டுப் பயிற்சியை கடந்த 7ம் தேதி மேற்கொண்டது.

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அடிப்படைக் கூட்டுப் பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. இப்பயிற்சியின் நிறைவில், மொம்பசா துறைமுகத்தில் சிறப்பான வரவேற்பு அளித்த கென்யா கடற்படையினருக்கு, ஐஎன்எஸ் தல்வார் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்திய கடற்படையை கென்ய போர்க்கப்பல் குழுவினர் பாராட்டினர்.

Leave your comments here...