17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி விடுவிப்பு – தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி

இந்தியா

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி விடுவிப்பு – தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை  மானியம் ரூ.9,871 கோடி விடுவிப்பு –  தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 5வது தவணை மூலம் ரூ.183.67 கோடியும், மொத்தமாக ரூ.918.33 கோடியும் கிடைத்துள்ளது

2021-22-ஆம் ஆண்டிற்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை (பிடிஆர்டி) மானியத்தின் 5-ஆவது மாதத் தவணையாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில், ரூ.183.67 கோடியும், 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.918.33 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது.

இந்த 5-ஆவது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.49,355 கோடி, தகுதி பெற்றுள்ள மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 275-ஆவது பிரிவின்படி இந்த பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியைப் போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன. 17 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்க 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது.

பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,452 கோடியை 17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டில் வழங்க வேண்டும் என்று நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் ரூ. 49,355 கோடி ‌(41.67%) இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு 15-ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம்.

Leave your comments here...