கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

தமிழகம்

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்த 6 பேரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் காசிமணி-(46). இவர் தனது குடும்பத்துடன் மனைவி ராமு களஞ்சியம், மகன் ராகுல், மருமகன் தலைமலை மற்றும் உறவினர் கௌதம் உட்பட ஐந்து பேர் திருமண நிகழ்வுக்காக புத்தாடைகள் வாங்க மதுரைக்கு வருகை புரிந்து புத்தாடைகள் மற்றும் நகைகளை எடுத்துவிட்டு மீண்டும் கோவிலூர் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கார் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி – குன்னத்தூர் இடையே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. அதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கி காரில் பயணம் செய்த மதுரை கே.புதூரை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஜுபுதின் (45) மற்றும் உடன் வந்த ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும்., படுகாயமடைந்த ஒருவர் மற்றும் துணி எடுக்க வந்த 5 பேர் என ஆறு பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த T.கல்லுப்பட்டி தீயணைப்பு மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த மூவரையும் போராடி மீட்டனர். இச்சம்பவத்தினால் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பேரையூர் டிஎஸ்பி தலைமையிலான டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து காரில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்., உயிரிழந்த இருவர் அடையாளம் தெரியாததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...