வருமான வரி தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு

இந்தியா

வருமான வரி தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு

வருமான வரி தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு

பிரதமர் மோடி கடந்த 2019ல் வருமான வரித் துறையில் முகமறியா வரி மதிப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தில் கணினி தன்னிச்சையாக வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை ஆய்வு செய்யும். அதில் தரப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பும்.

அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயர் அதிகாரிக்கு செல்லும். இந்த நடைமுறையால் வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, ஒருவர் தன் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க தேவையில்லை.

இந்த திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது. மேல்முறையீடுஇதனால் வரியை குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல்முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மின்னஞ்சல் முகவரிகளை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது

அதன்படி வரி மதிப்பீடு புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
அபராதம் தொடர்பான குறைகளுக்கு, samadhan.faceless.penalty@incometax.gov.in;
மேல்முறையீட்டுக்கு, samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Leave your comments here...