எல்லையில் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு..?

இந்தியா

எல்லையில் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு..?

எல்லையில் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு..?

காஷ்மீரில் சமீபகாலமாக டிரோன் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நேற்று காலை சம்பா மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு பாக்கெட்டை கண்டெடுத்தனர்.

அதில், 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டா வைப்பதற்கான உறைகளும் இருந்தன. அவற்றை ராணுவம் கைப்பற்றியது. அந்த ஆயுதங்கள், டிரோன் மூலம் போடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave your comments here...