உதான் திட்டத்தின் கீழ் “இம்பால் – ஷில்லாங்”கிற்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து துவக்கம்..!

இந்தியாஉள்ளூர் செய்திகள்

உதான் திட்டத்தின் கீழ் “இம்பால் – ஷில்லாங்”கிற்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து துவக்கம்..!

உதான் திட்டத்தின் கீழ் “இம்பால் – ஷில்லாங்”கிற்கும்  இடையே நேரடி விமானப் போக்குவரத்து துவக்கம்..!

உதான்- பிராந்திய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், நேற்று மணிப்பூர் இம்பாலுக்கும், மேகலாயா ஷில்லாங்கிற்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து முதன்முறையாக துவக்கி வைக்கப்பட்டது.

இதனால், வடகிழக்கு இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவது என்ற மத்திய அரசின் நோக்கம் நிறைவேறியுள்ளது.

மணிப்பூர் மற்றும் மேகாலயாவின் தலைநகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்தை துவக்க வேண்டுமென்பது அப்பிராந்திய மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். விமானப் போக்குவரத்து இல்லாததால் இப்பகுதி மக்கள் இம்பாலிலிருந்து ஷில்லாங் செல்வதற்கு 12 மணி நேர சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது துவக்கப்பட்டுள்ள இந்த விமான போக்குவரத்தால் இம்பாலிலிருந்து ஷில்லாங்கிற்கு ஒரு மணி நேரத்திலும், ஷில்லாங்கிலிருந்து இம்பாலுக்கு 75 நிமிடங்களிலும் சென்று விடலாம். உதான் திட்டத்தின் கீழ் 59 விமான நிலையங்களும், 361 விமான போக்குவரத்து தடங்களும், இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave your comments here...