டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே, 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 16 வீரர்கள் பங்கேற்ற இந்த தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

இவருக்கு அடுத்து ஜெர்மனியின் வெட்டர் 85.64மீ மற்றும், பின்லாந்தின் எடிலேடொலோ 84.50மீ ஈட்டி எறிந்து அடுத்தடுத்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். 15 நாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், ராணி 14வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...