ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!

ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில், மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

இங்கு, ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொரோனா இரண்டாவது காரணமாக தமிழகத்தின் 1, 2, 3 ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு திருக்கோவிலில் அனுமதி இல்லை என தமிழக அரசின் உத்தரவையடுத்து, பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பட்டாசார்யர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் அலுவலக ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடை முறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில், ஐந்தாம் திருநாள் 7-ஆம் தேதியும், கருட சேவை 9-ஆம் தேதியும் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான, திரு ஆடிப்பூர தேரோட்டம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல், இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

Leave your comments here...