மின்சார உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் அணு சக்தி ஆலைகளை நிறுவ திட்டம் – மத்திய அமைச்சர் தகவல்..!

இந்தியா

மின்சார உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் அணு சக்தி ஆலைகளை நிறுவ திட்டம் – மத்திய அமைச்சர் தகவல்..!

மின்சார உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் அணு சக்தி ஆலைகளை நிறுவ  திட்டம் – மத்திய அமைச்சர் தகவல்..!

மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூடுதல் அணு எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

நாட்டில் தற்போது 6780 மெகாவாட் திறன் கொண்ட 22 அணு உலைகள் இயங்குவதுடன், 700 மெகாவாட் திறன் கொண்ட காப்-3 என்ற ஓர் அணு உலை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி, தொகுப்பில் இணைக்கப்பட்டது. கூடுதலாக 8000 மெகாவாட் திறன் கொண்ட 10 அணுஉலைகள், கட்டமைப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

தற்போது அமைக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவு பெற்றவுடன், 2031-ஆம் ஆண்டிற்குள் அணு எரிசக்தியின் மொத்த திறன் 22480 மெகாவாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணு எரிசக்தி சார்ந்த அனைத்து அம்சங்களின் பாதுகாப்பிற்கும் மிக அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கொவிட் பீப்: கொவிட்-19 தொற்று பாதித்த நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்காக, முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறைந்த விலையிலான கருவியை இந்திய மின்னணு கழகம் மற்றும் அணுசக்தித் துறையுடன் இணைந்து ஐதராபாத்தின் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

இதுவரை 40 கொவிட் பீப் கருவிகள் ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 100 கருவிகள் ஐதராபாத்தின் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாத மத்தியில் அனுப்பப்படும்.

Leave your comments here...