விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு..? திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

அரசியல்தமிழகம்

விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு..? திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு..? திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையினான அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது.இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள தமது இல்லம் எதிரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இதேபோல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதில் :- விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு?
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது திமுக, ஆனால் ஆட்சி அமைந்த பிறகு விலை 10 ரூபாய் உயர்ந்து விட்டது.
இது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா?
2. கொரோனா நோய்க்கு சிகிச்சை கொடு, உண்மையை சொல்ல பயிற்சி எடு
கொரோனா நோய் தொற்று பாதிப்பில் மரணங்கள் மறைக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் மறுக்கப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்

3. சொன்னதை செய் திமுக – வே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே
நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால், தமிழக மாணவச் செல்வங்களை ஏமாற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யாததை கண்டிக்கிறோம்.

4. மேகதாதுவில் அணையா இனி காவிரி தண்ணீர் கனவா?
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழ் நாட்டை பாலைவனமாக மாற்ற போகிறதா கர்நாடக அரசு? அணை கட்டுவதை தமிழக அரசு உடனே தடுக்க வேண்டும்.
இதேபோல தமிழகம் முழுவதிலும் அதிமுக தொண்டர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைபோல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில்,திமுக அரசை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக குறித்து கடந்த பொதுத் தேர்தலில் திமுக மக்களிடம் பொய் பிரச்சாரங்கள் செய்தும், பொய் வாக்குறுதிகளை அளித்தும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஆன பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,சமையல் கேஸ் ரூபாய் 100 மானியம், குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உள்ளிட்ட எந்தவித வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

மாறாக அதிமுக கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி,சைக்கிள் உள்பட 16 வகையான பொருட்கள் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு ரத்து என கூறி மாணவர்களை ஏமாற்றி இந்த அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.இதனை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின் பேரில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது என்றார்.

Leave your comments here...