விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.!

தமிழகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வனஜோதி. இவரின் குடும்பத்திற்குச் சொந்தமான 17 செண்ட் விவசாய நிலத்தை, வாடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 27 வருடங்களாக குத்தகைக்கு பெற்று விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதற்காக ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் குத்தகை தொகை வழங்கி வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக குத்தகை பணம் 10 ஆயிரம் வழங்காமல், இருந்துள்ளார்.

இதையடுத்து, வனஜோதி, சந்திரசேகரிடம் குத்தகை பணம் கேட்டபோது, அந்த நிலத்திற்கு தான் பட்டா பெற்று விட்டதாகவும், குத்தகை பணம் வழங்க முடியாது எனக்கூறி மிரட்டியதாகவும், கூறப்படுகிறது.
இந்நிலையில், வனஜோதி தனது நிலத்திற்கான பட்டாவை தரக் கோரியும், சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave your comments here...