வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி: அமித்ஷா

இந்தியா

வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி: அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி: அமித்ஷா

இந்தியாவின் வடகிழக்கு பகுதியை பொருளாதார அடிப்படையில் முன்னுக்குக் கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. கிழக்கு காசி மலைத்தொடர், ஹீவாங் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கிந்திய மாகாணங்களில் தொழில் போக்குவரத்து இந்த சாலைகளில் அதிகரித்து மாநில வருவாய் அதிகரிக்கும். இரண்டாயிரத்து 23 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த எட்டு மாநிலங்களில் புதிதாக ரயில்வே போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்படுத்தப்படும்.

கிழக்கு மாநிலங்களில் தலைநகரங்கள் அனைத்தும் ரயில்வே போக்குவரத்தால் தொடர்புக்கு உள்ளாகும். இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேகாலயா மாநில முதல்வர் கொன்ராட் சங்மா மற்றும் யூனியன் அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து உரையாற்றினர்.

அசாம் தேர்தலில் பாஜ., மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கிழக்கிந்திய மாநிலங்களுக்கு வருகை தந்தார். உம்சவல்ஹி பகுதியில் ஆக்சிஜன் தொழிற்சாலையை திறந்து வைத்த அமித்ஷா சோட்ரா பகுதியில் காடு வளங்களை மேம்படுத்தும் திட்டத்தை துவக்கினார்.

விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்டு வளங்களை மேம்படுத்த ஓர் புதிய திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். வறட்சி மற்றும் வெள்ளம் ஆகியவற்றை தடுக்க மலைப்பகுதிகளில் விண்வெளி தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக கிழக்கிந்திய மாகாணங்களில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...