முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் – அர்ஜூன் சம்பத்

அரசியல்

முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் :- தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குறிப்பாக ஆரம்ப பாடசாலை, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பயலுகின்ற முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆனால் ஏழை இந்து மாணவ மாணவிகளுக்கு இத்தகைய கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக மதம் அடிப்படையில் பாகுபாடு கல்வியில் காட்டப்படுவது, மாணவ மாணவிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இனிமேல் இந்நன்னாளில் ஏழை இந்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கி நீதியை நிலைநாட்டும்படி பணிந்து வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...