இராஜபாளையம் நகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.!

தமிழகம்

இராஜபாளையம் நகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.!

இராஜபாளையம் நகராட்சி ஆணையரை  இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம்  ஆர்ப்பாட்டம்.!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி ஆணையராக சுந்தரம்பாள் பணிபுரிந்து வந்தார். இவரை, கடந்த 9-ம் தேதி கொடைக்கானல் ஆணையாளராக இடமாற்றம் செய்து, திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் சுல்தானா ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த இடமாற்றத்தை 16-ம்தேதி ரத்து செய்து மீண்டும் இராஜபாளையம் ஆணையாளராக ஆணையை வாங்கி பணி செய்து வருகிறார். நகராட்சி ஆணையாளர் பல இடங்களில் கையூட்டு பெற்று வருவதாகவும், அதற்கு அரசு ஊழியர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரை இடமாற்றம் செய்து ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் என்பவரையும் இடமாற்றம் செய்துள்ளார். இந்த இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரியும் ,நகராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராஜபாளையம் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது .nகடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்வே மேம்பால பணிகள் தற்போது, நடைபெற்று வருகிறது. இதற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு நகராட்சி ஆணையாளர் இடமாற்ற உத்தரவை திரும்பப் பெற்று மறுபடியும் நகராட்சி ஆணையாளர் பணியில் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும், இருவரும் கூட்டாக முறைகேடு செய்வதாகவும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் உடனடியாக நகராட்சியாளரை, இடமாற்றம் செய்ய வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் கேட்டுக்கொண்டார் . இந்த ஆர்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும், அவர் இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆணையாளரும் இடமாற்றம் செய்தாலும் செல்வதில்லை, அதேபோல், நாகராட்சியில் பணியாற்றக்கூடிய ஊழியர்களும் இட மாற்றம் செய்தாலும் மாறி செல்வதில்லை, அந்தளவுக்கு இராஜபாளையம் நகராட்சியில் வருமானம் அதிகரித்து வருகிறது. அதனால் தான், இடமாற்றம் செய்யாமல், இங்கேயே பணி செய்ய விரும்புவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்தி : ரவிசந்திரன்

Leave your comments here...