வாகன சோதனையின் போது மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் : 2 பேர் கைது..!

உள்ளூர் செய்திகள்

வாகன சோதனையின் போது மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் : 2 பேர் கைது..!

வாகன சோதனையின் போது  மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் : 2 பேர் கைது..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மணல் கடத்துவதாக இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுடன் வட்டாட்சியர் ராமச்சந்திரன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது எம் சாண்டல் கொண்டு செல்வதர்க்கு ஆவணங்களை வைத்து கொண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இருந்து ஒரு லாரியில் மணல் கடத்தி வந்துள்ளனர் லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் மைதீன் வயது 41 என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு லாரி மூலம் மணல் கடத்தி வந்த வாகனத்தை ஓட்டி வந்த லாரி டிரைவர் திருநாவுக்கரசு வயது 31 இவர்கள் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிருந்து சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மணல் கடத்தும் அளவிற்கு மணல் கடத்தல் நடைபெற்று வருகின்றது. மேலும், வாகன சோதனையை தீவிரபடுத்த வேண்டும் என்பது, சமூக ஆர்வலர் கருத்தாக உள்ளது.

Leave your comments here...