நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது : பல்வேறு மசோதாக்கள் தாக்கல்…!

இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது : பல்வேறு மசோதாக்கள் தாக்கல்…!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது : பல்வேறு மசோதாக்கள் தாக்கல்…!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட 29 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவற்றில் 3 மசோதாக்கள், சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக அமையும். இவற்றில் ஒன்று, கடந்த மாதம் 30-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம்-2021’ ஆகும். இது அத்தியாவசிய பாதுகாப்பு சேவையில் ஈடுபடுவோர் கிளர்ச்சி மற்றும் வேலை நிறுத்ததத்தில் ஈடுபடுவதை தடை செய்கிறது.

பொதுவாக அவசர சட்டங்கள், நாடாளுமன்ற அமர்வு தொடங்கிய 6 வாரங்களுக்குள் முறைப்படி மசோதா தாக்கல் செய்து சட்டம் ஆகாவிட்டால் காலாவதியாகி விடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.நடப்பு நிதி ஆண்டுக்கான மானியங்களுக்கான துணைக்கோரிக்கைகள், மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நடப்பதால், கொரோனா கால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். இரு சபைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.444 மக்களவை எம்.பி.க்களும், 218 மாநிலங்களவை எம்.பி.க்களும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனையடுத்து இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரக் ஓ பிரையன் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆரோக்கியமான மற்றும் பலனளிக்கும் விவாதங்கள் நடத்த தயார் என பிரதமர் மோடி இக்கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave your comments here...