சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராளியாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

இந்தியா

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராளியாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் போராளியாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

உலகம் சந்தித்து வரும் பருவநிலை நெருக்கடியின்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இயக்கத்தின் போராளியாக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

“பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவேண்டும்”, என்று அவர் கூறினார்.மாசு சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மாசு ஏற்படுத்துபவர்களிடமிருந்து அபராதத் தொகை பெறப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அண்மையில் இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு, உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள், கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் வெப்பம் போன்றவை, புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் தீவிர வானிலை நிகழ்வுகளில் அதிகரித்துவரும் அதிர்வெண்ணைக் குறிக்கும் சம்பவங்கள் என்று அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது உண்மை, அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை என்பதை இந்த சமிக்ஞைகள் எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதால் சமீபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், பருவநிலை நெருக்கடியையும் இது போன்ற சம்பவங்களையும் (கடந்த ஆண்டை விட 2020-21 ஆம் ஆண்டில் 34% கூடுதல்) விஞ்ஞானிகள் தொடர்புபடுத்திப் வருவதாக கூறினார்.

ஐதராபாத்தில் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் பயிலும் பயிற்சியாளர்களிடையே இன்று உரையாற்றிய வெங்கையா நாயுடு, இதுபோன்ற கசப்பான தருணங்களில் அனைவரின் நலனிற்காக இயற்கையோடு நாம் இணக்கமாக இருந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். நமது அதிகரித்துவரும் தேவைகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சமன்படுத்துவது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். “எப்போதும் போல அதனை வர்த்தகமாக்கக்கூடாது”, என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave your comments here...